இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI
இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வீரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நீரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றீர்
ஆவியால் நிறைத்திடுவீர்
வரங்கள் உவந்தளிப்பீர்
கனியால் அலங்கரிப்பீர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2