இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

Deal Score0
Deal Score0

1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்
தாமதமின்றி தீவிரமாய்;
அன்போடு நின்று மா ஊக்கமாய்
வா, என்றழைக்கிறார்

பல்லவி

பாவமின்றி சுகித்திருப்போம்
மா சந்தோஷமாகச் சந்திப்போம்
நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்
பேரின்ப தேசத்தில்!

2. பாலரே வாரும் தாராளமாய்
என்றுரைத்தாரே மா தயவாய்;
நேசரை நம்பி மகிழ்ச்சியாய்
தாமதமின்றி வா! – பாவமின்றி

3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்
நம்பிக்கையோடு வந்தடைவோம்
மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்
இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo