இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே – ஆ
ருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்
உரைக்கவும் பெயரும்
1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்
சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆ
பந்தனை ஜெயித்து,
வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்
2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்
வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆ
வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே
வேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே
3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்
நோய்பிணி யாவுமே தொலையும் – ஆ
அதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்
என்றென்றும் ஜெயிக்கும்
4.பயங்கர சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும்
மயங்கிடும் நஞ்சை ஜெயிக்குமே – ஆ
தயங்கி நிற்பவரை தாங்கிடும் பெலனே
தயங்கி வந்தவரை ஆற்றிடும் பெயரே
5.ஆ! என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில்
ஆனந்தமே அதன் நினைவில் – ஆ
தேனிலும் இனிமைபேதைக்கு மகிமை
தேனிலும் இனிமை, ஏழைக்கும் உரிமை
6.வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும்
தொனித்திட இயேசுவின் நாமம் – ஆ
மடங்குமே முழங்கால், அடங்குமே துடுக்கும்
மடங்கு மெப்பெயரும் நடுங்குமே அவர்க்கு