உயிருள்ள இயேசுவின் கரங்களிலே – Uyirulla Yesuvin Karangalilae
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே – Uyirulla Yesuvin Karangalilae
1. உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்பனித்தேன்
ஏற்றுக்கொள்ளும், ஏந்திக்கொள்ளும், உபயோகியும்
உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
என் வாழ்வில் நீர்தான் எல்லாமே
2. ஆனந்தம், ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கின்றேன்
உள்ளம் நிரம்ப, வாய் நிறைய, ஸ்தோத்திரமே
உம்மை துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவையை உயர்த்தாமல் உறக்கமே இல்லை
உம்மை சொல்லாமல் வாழ்வே இல்லை
உம்மை நம்பாமல் நித்தியமில்லை
3. அபிஷேக தைலத்தை சிரசினிலே
இப்போ ஊற்றி நிரப்புகிறீர்
எழும்பிடுவேன், பிரகாசிப்பேன், உமக்காகவே
உந்தன் அக்கினி என்னை ஆளட்டும்
அதிகாரம், வல்லமை பெறுவேன்
உந்தன் சாயல் என்னை மாற்றட்டும்
உம்மை போல அழகாய் மாறுவேன்
4. இயேசுவின் பாதத்தில் சாஷ்டாங்கமாய்
விழுந்து பணிந்து தொழுகின்றேன்
உலகம் எல்லாம், மறக்கின்றேன் உம் அன்பிலே
உந்தன் அன்பு என்னை நிரப்பும்
உந்தன் இரக்கம் என்னில் இருக்கும்
உந்தன் வார்த்தை என்னை நடத்தும்
உந்தன் மகிமை என்னை நிரப்பும்
5. நீர் செய்த சகல உபகாரங்கள்
நினைத்து, நினைத்து துதிக்கின்றேன்
அல்லேலூயா, ஆராதனை உமக்குத்தானே
உந்தன் நன்மை எங்கும் சொல்லுவேன்
நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்
பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்
சாட்சியாய் என்றும் வாழுவேன்.
Uyirulla Yesuvin Karangalilae song lyrics in English
1.Uyirulla Yesuvin Karangalilae
Ennai Muluvathum Arpanithaen
Yaettrukkollum, Yaenthikkollum, Ubaiyokium
Unthan Siththam Ennil Irukkum
Vazhuvamal Athil Nadappaen
Ummai Endrum Pattrikkolluvaen
En Vazhvil Neerthan Ellamae
2.Aanantham Aanantham Unthan Samugam
Aarathanai Vezhathil Mithakkindraen
Ullam Niramba, Vaai Niraya, Sthothiramae
Ummai Thuthikkamal Irukka Mudiyavillai
Siluvaiyai Uyarthamal Urakkamae Illai
Ummai Sollamal Vazhvae Illai
Ummai Nambamal Nithiyamillai
3.Abishega Thailathai Sirasinilae
Ippo Ootri Nirappugireer
Elumbiduvaen, Pragasippaen, Umakkagavae
Unthan Akkini Ennai Aalattum
Athigaaram, Vallamai Peruvaen
Unthan Sayal Ennai Maattrattum
Ummai Pola Azhagai Maaruvaen
4.Yaesuvin Paathathil Saashtaangamai
Vizhunthu Paninthu Thozhukindrean
Uzhakam Ellam, Marakkindraen Um Anbilae
Unthan Anbu Ennai Nirappum
Unthan Irakkam Ennil Irukkum
Unthan Vaarthai Ennai Nadathum
Unthan Magimai Ennai Nirappum
5.Neer Seitha Sagala Ubakaarangal
Ninaithu, Ninaithu Thuthikkindraen
Alleluia, Aarathanai Umakkuthanae
Unthan Nanmai Engum Solluvaen
Nandri Maravaamal Endrum Nadappaen
Paththil Ondrai Umakku Koduppaen
Saatchiyai Endrum Vaazhuvaen