உள்ளம் மகிழுதையா – Ullam Magiluthaiya
உள்ளம் மகிழுதையா
உம் நேசம் நினைக்கையிலே
உலகில் உள்ள உறவை விட
உம் நேசமே சிறந்ததையா
1. உம்மைத்தான் தேடி வந்தேன்
உம் பாதம் சரணடைந்தேன்
உம் முகத்தைப் பார்த்துப் பார்த்து
என்னை நானே மறந்தே போனேன்
2. உலகம் மாறிடுமே
உறவுகள் மறைந்திடுமே
உம் நேசமோ மாறாதையா
உம் பாசமோ மறையாதையா
3. தாயின் அன்பைவிட
தந்தையின் அன்பைவிட
உம் அன்புதான் மேலானது
உம் அன்பு தான் நிலையானது