எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere
எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere
எந்தன் மேய்ப்பர் நீரே
என் துணையும் நீரே
எந்தன் நேசர் நீரே
வழுவாமல் காப்பவரே-2
ஏழை என்னை மறவாமல்
உம் காருண்யத்தால்
என்னை பெரியவனாக்கினீர்-2
1.ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்
ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்-2
உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி
குயவனை போல என்னை வனைந்தீர்-2
2.ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்
அன்பை தேடி ஏங்கி நின்றேன்-2
என் தாயை போல என்னை தேற்றி
என் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர்