என் உள்ளமே கர்த்தாவை – En Ullamae Karthavai Lyrics

Deal Score0
Deal Score0

என் உள்ளமே கர்த்தாவை – En Ullamae Karthavai Lyrics

1.என் உள்ளமே, கர்த்தாவை
ஆவலாய்த் துதித்து,
என் ஆவியே, தெய்வன்பை
எப்போதும் போற்றிடு;
உன் பாவத்தை மன்னித்து,
உன் கேட்டை நீக்கினார்;
உன் ஜீவனை ரட்சித்து,
நற்சீர் அளிக்கிறார்.

2. மகா இரக்கமான
சகாயர் கர்த்தர்தான்,
நொறுங்குண்டோருக்கான
அருளின் ஊற்றேயாம்;
கோபத்தை என்றென்றைக்கும்
என் தேவன் கொள்ளாரே,
மனம் நறுங்குண்டோர்க்கும்
கிருபை செய்வாரே.

3. தந்தை தன் மைந்தருக்கு
இரங்கும் வண்ணமாய்
கர்த்தர் தம் தாசருக்கு
இரங்குவார் மெய்யாய்;
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்,
நாம் தூளும் மண்ணும் என்று
அறிந்திருக்கிறார்.

4.கர்த்தரின் வேதம் சொல்லும்
ப்ரமாணப்படியே
இசைந்து அவர் காட்டும்
அன்புக்கு ஏற்கவே
நடந்து கொள்ளுவோர்க்கு
கடாட்சம் அருள்வார்,
பரமாநந்தத்துக்கு
ஆளாக்கி ரட்சிப்பார்.

En Ullamae Karthavai Lyrics in English

1.En Ullamae Karthavai
Aavalaai THuthithu
En Aaviyae Deivanbai
Eppothum Pottridu
Un Paavaththai Mannithu
Un Keattai Neekkinaar
Un Jeevanai Ratchithu
Narseer Alikkiraar

2.Mahaa Irakkamaana
Sahaayar Kartharthaan
Norungundorukkaana
Arulin Oottreayaam
Kobaththai Entrentraikum
En Devan Kollaarae
Manam Norunkundorkkum
En Devan Kollaarae
Manam Narunkundorkkum
Kirubai Seivaarae

3.Thanthai Than Maintharukku
Irangum Vannamaai
Karththar Tham Thaasarukku
Eranguvaar Meiyaai
Naam Inna Uruventru
Nantraaka Arivaar
Naam Thoolum Mannum Entru
Arinthirukkiraar

4.Kartharin Vedham Sollum
Piramaanapadiyae
Isainthu Avar Kaattum
Anbukku Yearkavae
Nadanthu Kolluvorkku
Kadatcham Arulvaar
Paramananthathukku
Aalaakki Ratchippaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo