
எல்லாம் உம்மாலே – Ellam Ummalae
எல்லாம் உம்மாலே – Ellam Ummalae
எல்லாம் உம்மாலே மகிமை உம்மாலே
கனமும் உம்மாலே வல்லமை உம்மாலே
உம்முடைய கரத்திலே சத்துவம் உண்டு
உம்முடைய கரத்திலே வல்லமை உண்டு
எல்லாம் உம் கரத்தால் வந்தது
பலப்படுத்தவும் உம்மால் ஆகும்
மேன்மை படுத்தவும் உம்மால் ஆகும்
எல்லாம் உம் கரத்தால் வந்தது
இப்போதும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
உமது மகிமை உள்ள நாமத்தை துதிக்கிறோம்
எல்லாம் உம் கரத்தால் வந்தது
இதயத்தை சோதித்து பிரியமாயிருக்கிறார்
என்பதை அறிந்து நான் ஸ்தோத்திரம் செய்வேன்
எல்லாம் உம் கரத்தால் வந்தது