ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics
ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics
ஓலைக் கரங்களில் ஓசன்னா
சாலை நெடுகிலும் ஓசன்னா
தாவீதின் மகனே ஓசன்னா
உன்னதம் தனிலே ஓசானா
மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்
பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்
விடியல் வேந்தனை வரவிடுங்கள்
வாழ்வை நமக்குத் தரவிடுங்கள்
அடிமை நிலையை மாற்றப் பிறந்த
அன்பின் அரசர் இவர் தானோ ?
எளிமை நிலையை தோளில் சுமந்த
விண்ணின் மகனும் இவர் தானோ ?
மரியின் மகனாய் பிறந்தாரோ
மறியின் முதுகில் இருந்தாரோ
மனிதம் சுமந்து திரிந்தாரோ
மரணம் வருதல் அறிந்தாரோ
ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்து
அரசின் அரசை வரவேற்போம்
எபிரே யத்துச் சிறுவர் போலே
குருத்து ஓலைகள் அசைத்திடுவோம்
இருளில் ஒளியாய் நடந்தாரோ
எங்கும் ஒளியா திருந்தாரோ
விண்ணின் வாழ்வைத் துறந்தாரோ
பாவம் மறையத் தெரிந்தாரோ