கர்த்தாவே உம்மைத் துதிப்பேன் – Karthavae Ummai Thuthippean Lyrics
கர்த்தாவே உம்மைத் துதிப்பேன் – Karthavae Ummai Thuthippean Lyrics
1.கர்த்தாவே, உம்மைத் துதிப்பேன்
மகா மகிழ்ச்சியாக,
என்றைக்கும் உம்மைப் போற்றுவேன்
உத்தம பணிவாக;
என் ஆவியும் என் தேகமும்;
உம்மை நன்றாகத் துதிக்கும்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
2.அதேனெனில், என் துன்பத்தில்
கர்த்தாவைக் கெஞ்சிக் கொண்டேன்
அப்போது ஏற்ற வேளையில்
மகா ரட்சிப்பைக் கண்டேன்;
எல்லாரும் இதைக் கேளுங்கள்,
என்னோடு கூடப் பாடுங்கள்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
3.கர்த்தர் ஓர்போதும் தமது
ஜனத்தைக் கைவிடாரே;
கண்ணோக்கி ஆசீர்வதித்து
சகாயம் அளிப்பாரே;
இருளில் இடற ஒட்டார்,
பிதாவைப் போலத் தாங்குவார்;
கர்த்தாவுக்கே புகழ்ச்சி.
Karthavae Ummai Thuthippean Lyrics in English
1.Karthavae Ummai Thuthippean
Mahaa Magilchiyaaga
Entraikkum Ummai Pottruvean
Uththama Panivaaga
En Aaviyum En Deagamum
Ummai Nantraaga Thuthikkum
Karthavukae Pugalchi
2.Atheneanil En Thunbaththil
Karththavai Kenji Kondean
Appothu Yeattra Vealaiyil
Mahaa Ratchippai Kandean
Ellarum Ithai Kealungal
Ennodu Kooda Paadaungal
Karthavukae Pugalchi
3.Karthar Oor Pothum Thamathu
Janaththai Kaividaarae
Kannokki Aaseervathithu
Sahaayam Alippaarae
Irulil Irada Ottaar
Pithaavai Pola Thaanguvaar
Karthavukae Pugalchi