காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum
காலம் முழுதும் எனை காக்க
கரங்கள் பிடித்து வழி நடத்த
எனக்காக பிறந்தவரே
எந்தன் வாழ்வில் நீ புது உறவே
மானுடத்தின் மகுடமாய்
மனித நேயத்தின் மன்னவனாய்
இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனே
உன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்
எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமே
உன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தை
எந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமே
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ.
1
சிதைந்த வாழ்வை நேரிய வாழ்வாய் மாற்ற
உடைந்த மனதை புது உறவில் உருவாக்க
உயிராய் பிறந்த பாலகனே உறவாய் மலர்ந்த மன்னவனே – 2
வாடிப் போகும் வாழ்க்கையில் வசந்தத்தை கொடுக்க
புதிய பாதையில் மனித மனங்களை நடத்த
வழியாய் பிறந்த ஒளிச் சுடரே தேடி வந்த ஆறுதலே – 2
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ.
2
அலைந்து திரியும் என் மனதை அரவணைக்க
அமைதி தேடும் வாழ்க்கையில் நிம்மதி கொடுக்க
அன்பின் துதனாய் பிறந்தவரே ஏழை மகனாய் வந்தவரே – 2
நீங்கா உறவாய் எம்மில் தங்கிடும் உயிராய்
நிலைத்த மகிழ்வை நாளும் கொடுத்திடும் அருளாய்
தரணி மாற்ற வந்தவரே தாகம் போக்க பிறந்தவரே – 2
ஆரிராரிராரோ – 4.
காலம் முழுதும் எனை காக்க
கரங்கள் பிடித்து வழி நடத்த
எனக்காக பிறந்தவரே
எந்தன் வாழ்வில் நீ புது உறவே
இம்மண்ணில் பிறந்தவரே
இம்மானுவலே இறைவனே.