கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம்
1. கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம்
கொஞ்சநாளில் வீடு செல்லுவோம்
நித்ய நாளுதயமாம் ராவொழிந்துபோம்
கொஞ்சநாளில் வீடு செல்வோம்
பல்லவி
இன்னும் கொஞ்ச நாள் இன்னும் கொஞ்ச நாள்
யோர்தான் அலைதாண்டுவோம்
கண்டு சந்திப்போம் கொண்டல் ஓய்ந்திடும் அந்நாள்
கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்.
2. கைக்கு நேரிடும் வேலை சீராய் செய்குவோம்
கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
திவ்ய கிருபையால் தினம் பெலன் கொள்ளுவோம்
கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
3. சோர்ந்த மாந்தர்க்காய்ப் பாதை செவ்வை பண்ணுவோம்
கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
ஓ! நம் நேச நெஞ்சின் செல்வாக்கை வீசுவோம்
கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
4. துன்பங் கவலை நீங்கிக் களைப்பாறுவோம்
கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
கணணீரோழியும் கானான் நாட்டில் வாழ்வோம்
கொஞ்ச நாளில் வீடு செல்வோம்