குறையாத அன்பு கடல்போல வந்து – Kuraiyatha Anbu Kadalpola Vanthu
குறையாத அன்பு கடல்போல வந்து – Kuraiyatha Anbu Kadalpola Vanthu
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே
அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே
அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே
கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய்
கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய்
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண் மீது வாழ வழி செய்கின்றாய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் மண் மீது வாழ வழி செய்கின்றாய்
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய்
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய்
தீமை சிறைகொண்ட எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழும் வழி காட்டினாய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் சிறை மீண்டு வாழும் வழி காட்டினாய்
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே
அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே