சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

Deal Score0
Deal Score0

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2)

சரணங்கள்

1. உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல

2. போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஆற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியை – சகல

3. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும்
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார் – சகல

4. கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார்
சத்தியத்தில் நிற்போர் மறுரூபமடைவார்
விரைவில் இயேசு வேகமே வருவார்
சந்திக்க ஆயத்தமா? – சகல

5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதில் ஒன்று நமக்காய் ஆயத்தம்பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினம் நாமும்
அல்லேலூயா பாடுவோம் – சகல

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo