ஜகநாதா குருபரநாதா – Jaganaatha Kurupara naatha
ஜகநாதா குருபரநாதா – Jaganaatha Kurupara naatha
ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!
அனுபல்லவி
திகழுறுந் நாதா! புகழுறும் பாதா
தீதறும் வேத போதா!’
சரணங்கள்
1.நிகராய் இப் பெரு நன்றி நீ இயற்றினதன்றி,
நீதிக்கும் பலியாகப் பரிந்தாயே;
புகர்கொள் எமை நினைந்து பூங்காவில் மிக நொந்து;
பொருவில் உதிர வேர்வை சொரிந்தாயே
2.’தனையர்வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே.
3.சயிலம் பிளந்திடவும்’தபனன் வில் மங்கிடவும்,
ஸ்வாமி, எமைப் ‘புரக்க மரித்தாயே;
உயிரோடு செஞ்சுடர்போல் உயிர்த்து, திருவுடல்மேல்
உற்ற ஐந்து காயங்கள் தரித்தாயே.
4.மாதவர் எங்கும் செல்ல, மறை உபதேசஞ் சொல்ல
வரங்கள் அளவில்லாது பொழிந்தாயே;
ஓத ஒண்ணாத துங்க உன்னதமான அங்கம்
உலகில் அமைந்து, முக்திக் கெழுந்தாயே.
5. ‘அமரர் முற்றும் அறியார், ‘அடிகள் சற்றும் அறியார்,
ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் ‘புரந்தாளும், மானப் பர்த்தாவே.
Jaganaatha Kurupara naatha lyrics in English
Jaganaatha Kurupara naatha Thiru
Arul naatha Yesu Pirasaatha Naatha
Thigalurum Naatha Pugalurum Paatha
Theetharum Vedha Pothaa
1.Nigaraai Ipperu Nantri Nee Iyantrinathantri
Neethikkum paliyaai Parinthaayae
Pugarkol Emai Ninaithu Poongavil miga Nonthu
Poruvil Uthira Vearvai Sorinthaayae
2.Thanaiyarval Noaiyai Kanda Thaayaar Marunthut Konda
Thagaimai Ena Pearnabu Koornthayae
Vinaiyar Vem Paava Keadu Vilaga Ariya Paadu
Meavi Anubavikka Nearnthayae
3.Sayilam apIlanthidavum Thabananvil Mangidavum
Swami Emai Purakka Marithayae
Uyirodu Senjudarpoal Uyirthu Thiruthudalmael
Uttra Ainthu Kaayangal Tharithayae
4.Maathar Engum Sella Marai Ubadesam Solla
Varnagal Alavillathu Polinthayae
Ootha Onnaatha Thunga Unnathamaana Angam
Ulagil Amainthu Mukthi Kealunthayae
5.Amarar Muttrum Ariyaar Adigal Sattrum SAriyaar
Aar Un Thiral Arivaar Karthavae
Emathu pavam Poruthae Erakkam Emmael Uguthae
Emai Purnthaalum Maana Parthavae