ஜீவனுள்ள தேவனுக்கு – Jeevanulla Devanuku
ஜீவனுள்ள தேவனுக்கு – Jeevanulla Devanuku
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்றி பாடிடுவேன் நாளெல்லாம் உயர்த்திடுவேன் – 2
Thank you JESUS – 2
1.எனக்காய் மரித்த இயேசுவே
எனக்காய் உயிர்த்த ராஜனே -2
இருப்பவர் இருந்தவர்
இனிமேலும் வருபவர் -2
2.உம்மை மறந்து அலைந்தேனே
உலகின் பின்னே சென்றேனே
உம்மோடு இணைத்தீரே
உள்ளமே மகிழுதே
3.உந்தன் அன்பை கண்டேனே
என்னை நானே தந்தேனே
எழுப்புதல் காணவே
ஏங்குதே உள்ளமே
4.செய்த நன்மைகள் கோடி
சொல்லி மகிழ்வேன் பாடி
குறைவின்றி காத்தீரே
கூடவே இருக்கின்றீர்
5.உம்மை அறிந்த நாள்முதல்
உம்குரலை கேட்கிறேன்
உந்தன் வேதம் இன்பமே
உந்தன் பாதம் தஞ்சமே
6.வெற்றி தந்த ராஜனே
வெற்றி கீதம் பாடுவேன்
வேதனை நீக்கினீர்
சோதனை மாற்றினீர்