தூய ஆவியானவர் இறங்கும்
பல்லவி
1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும்
3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்
4. ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்