நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நேசிப்பார் பாவியை யாராயினும்
நோக்கிப் பாரேன் கொல்கதாவை
நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2)
பல்லவி
பார், பார், பார் மனமே
பார சிலுவையில் யார்?
பாவியாம் என்னையும் மீட்டாரே
பாசமுடன் அழைக்கிறார் (2)
2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை
விண்வெளி வீரரும் தேடினரே
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார்
3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை
தேடினர் ஞானியர் தேசமெங்கும்
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானரே (2) – பார்
4. சிந்தினார் இரத்தம் பாவி உனக்காய்
சிந்தித்து பாவி என்றுணர்வாயா
சிறந்த வெற்றி உனக்கெதிரே
சித்தம் வைத்தே உன்னைச் சேர்த்திடுவார் (2) – பார்