![](https://www.christianmedias.com/wp-content/uploads/2020/03/profile-1.png)
பயப்படாதே பாரிலிப்போதே
பல்லவி
பயப்படாதே பாரிலிப்போதே
திகையாதே கலங்காதே
அனுபல்லவி
தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன்
சரணங்கள்
1. தண்ணீரை நீ கடக்கும்போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே
1. தண்ணீரை நீ கடக்கும்போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே
2. அக்கினியில் நடக்கும் போது
அஞ்சவேண்டாம் வேகாதிருப்பாய்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது – பயப்படாதே
3. இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகரான தேவனே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணிபோல் அருமையானவனே – பயப்படாதே
4. உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்ணை மூடாமல் காப்பேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே
5. முந்தினதை நினைக்க வேண்டாம்
பூர்வமானத்தை சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர வேண்டாம்
இந்த வாக்குகளை விடவேண்டாம் – பயப்படாதே
6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தையும் விடாதே
கடந்ததை எண்ணி வாடாதே
நடந்ததை வீணாய் நாடாதே – பயப்படாதே
7. அல்லேலூயாவுக் கருகனே
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்பா ஒமேகாதான் நானே
வல்ல கண்ணால் நடத்துவேனே – பயப்படாதே