பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics
கர்த்தருடைய ஜெபம்
1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,
பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா!
2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக
உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா!
3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல்
எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா!
4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை
பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா!
5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும்
உண்டாக என்றென்றைக்கும் ஆமென், அல்லேலூயா!