மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare
மனிதரின் நடுவே வசிப்பவரே
எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே
எங்களின் தேவனாய் இருப்பவரே
கண்ணீர் யாவையும் துடைப்பவரே
மரணமும் துக்கமும் இனி இல்லையே
வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே
முன்தினவை யாவுமே ஒழிந்தனவே
சகலமும் உம்மால் புதிதாயினவே
அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…
ஆதியும் அந்தமுமே…
துவக்கமும் முடிவும் நீரே-2
ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே
உதித்திடும் நீதியின் சூரியனே
வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே
நீதியாய் நடத்திடும் ஆளுனரே
தெய்வத்துவத்தின் பரிபூரணமே
இஸ்ரவேலின் ஜெயபலமே
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
கிருபையால் என்னை மீட்ட இரட்சகரே