வானங்களும் வானாதி வானங்களும் – Vaangakalum vaanathi
வானங்களும் வானாதி, வானங்களும் உமைக்
கொள்ளா அற்புதா!
சரணங்கள்
1. கிருபையும் நிபந்தனையும் – அருமையாய்க் காத்த தேவா
பார்த்து வந்தீர், பராமரித்தீர், சேர்ந்து இம்மட்டும் நடத்தினீர் – வானங்
2. எல்லா ஜாதி ஜனங்களும், வல்ல இரட்சிப்படையச் செய்யும்
கல்வாரியின் இரத்தத்தினால், பொல்லாததைச் சுத்தி செய்யும் – வானங்
3. நீதி நியாயமுள்ள தேவா – ஜோதியில் வாசஞ் செய்பவர்
பாவிகளைச் சிநேகிப்பவர், போதியதைப் பொழிகிறவர் – வானங்
4. நீரே ராஜாதி ராஜாவே – கர்த்தாதி கர்த்தரானவரே
எங்களை ராஜாவாக்கினீரே, ஆசாரியர்களாக்கினீரே – வானங்
5. பஞ்சம் பட்டினி கொள்ளை நோயில், கொஞ்சுவோரின் தஞ்சமானவர்
அஞ்சுகிறோம் நெஞ்சில் தேவா, எஞ்சுகிறோம் மிஞ்சும் மூவா – வானங்
6. கைகளினால் கட்டப்பட்டதில், காணப்படா வல்ல தேவா
மெய்யாயெம்மில் இருக்கிறவா, செய்கைகளினால் தெரிகிறவா – வானங்
7. நித்திய வாசியானவர் – சத்தியமாம் பெயர் கொண்டவா
இத்தரையில் எம்மோடுள்ளவா, அதிபனே உமக்கல்லேலூயா – வானங்