வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

Deal Score+1
Deal Score+1

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

வானில் ஓர் அதிசயம்
இயேசு பிறந்தார்
விண்ணவர் போற்றிட
பாலன் பிறந்தார்

புது ஒளியாய் உதித்தார்-இயேசு
உறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவே
உறவாக என்னை மீட்டீர்
விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரே
விலகாமல் என்னை சேர்த்தீர்

இருள் நீக்கும் ஒளியாய்
வழி காட்டும் துணையாய்
இயேசு என்னில் பிறந்தார்
இம்மனுவேலனாய்
விண்ணாளும் இராஜனாய்
என் இயேசு மண்ணில் உதித்தார்-2

பாவங்கள் போக்கவே
இயேசு பிறந்தார்
சாபங்கள் தீர்த்திட
பாலன் பிறந்தார்

பாவ பலியாய் உதித்தார்-இயேசு
உறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவே
உறவாக என்னை மீட்டீர்
விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரே
விலகாமல் என்னை சேர்த்தீர்

இருள் நீக்கும் ஒளியாய்
வழி காட்டும் துணையாய்
இயேசு என்னில் பிறந்தார்
இம்மனுவேலனாய்
விண்ணாளும் இராஜனாய்
என் இயேசு மண்ணில் உதித்தார்-2-உறவாக

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo