விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum

Deal Score+1
Deal Score+1

Song Lyrics:

விண்ணோரும் மண்ணோரும் அகிலமெங்கும் புகழ உதித்தீரே என் இயேசுவே
பாவங்கள் சாபங்கள் இன்னல்கள் அகல பிறந்தீரே என் இயேசுவே
கன்னி மரி வயிற்றில் வந்த இயேசு பாலன்
இம்மானுவேலன் என்னோடிருப்பார்
எந்தன் உள்ளம் பாடும் ரட்சகரின் கீதம்
பிறந்தாரே என்று திசை எங்கும் கேட்கும்

1. கருவிலே தோன்றும் முன் எனை நோக்கினீர்
நீர்க்கால்கள் ஓரம் நீர் எனை நாட்டினீர்
புடமிட்ட பொன்னாக எனை மாற்றினீர்
உம் பிள்ளை என சொல்லி எனைத் தேற்றினீர்
கிழக்கே ஓர் நட்சத்திரம் உதிக்கும் என்றான்
விண்ணோரும் மண்ணோரும் பணிவார் என்றான்
மேய்ப்பர்கள் ராஜாக்கள் ராக்கால நேரம்
பொன் வெள்ளி தூபவர்க்கம் கொண்டு பணிந்தும்மை

2. கருவாக உருவாக உதித்த திரு பாலன்
யூதா கோத்திர இம்மானுவேலன்
காலங்கள் அத்தனையும் ஒரு நொடியில் மாற
நற்செய்தி திசை எட்ட தூதர்களும் பாட
சாத்தானின் கோட்டையைத்தகர்த்த என் மறையே
ராஜாதி ராஜன் என் தேவனும் நீரே
இப்பாவிக்காக பிறந்தீரே நாதா
இந்நாளில் நன்னாளில் உம்மைப்பாடி போற்றிட
—————————————————————————————-
Vinnorum mannorum agilamengum pugazha udhiththeerae en yesuve
Paavangal saabangal innalgal agala pirandheerae en yesuve
Kanni mari vayitril vandha yesu baalan immaanuvelan ennodiruppaar
Endhan ullam paadum ratchagarin geetham pirandhaarae endru thisai engum kaetkum

1. Karuvilae thondrum mun enai nokkineer
Neerkaalgal oram neer enai naattineer
Pudamitta ponnaaga enai maatrineer
Um pillai ena solli enai thaetrineer
Kizhake or natchathram udhikkum endraan
Vinnorum mannorum panivaar endraan
Meipargal rajaakkal raakaala naeram
Pon velli thoobavarkam kondu panindhummai

2. Karuvaaga Uruvaaga Udhitha Thiru Baalan
Yoodhaa koththira immaanuvelan
Kaalangal aththanaiyum oru nodiyil maara
Narchcheidhi thisai etta thoodhargalum paada
Saaththaanin kottaiyaithagarththa en maraiye
Rajadhi rajan en devanum neerae
Ippaavikkaaga pirandheerae naadha
Innaalil nannaalil ummaippaadi potrida

https://www.youtube.com/watch?v=e_Qgdr-odWc&ab_channel=HearnRejoice
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo